SAIGURU MIND DEVELOPMENT RESEARCH & WELLNESS CENTRE

SaiGuru Social Service Foundation’s

SAIGURU MIND DEVELOPMENT (Psychology) RESEARCH & WELLNESS CENTRE

சாயிகுரு மனநல மருத்துவ  ஆராய்ச்சி & சிகிச்சை மையம்

SaiGuru Mind Development Research & Wellness Centre: Advancing Discovery, Transforming Mental Health

Welcome to SaiGuru Mind Development Research & Wellness Centre a beacon of innovation and compassion dedicated to pioneering research in the realm of mental health. Grounded in a commitment to scientific excellence, our centre is at the forefront of unravelling the complexities of mental health to foster meaningful change.

Research at the Core: At the heart of our mission lies a relentless pursuit of knowledge. Our research initiatives delve into the intricacies of mental health, exploring diverse facets such as neurobiology, treatment modalities, societal impacts, and the lived experiences of individuals navigating the complexities of mental well-being.

Innovative Methodologies: We employ state-of-the-art methodologies to conduct rigorous and insightful research. From clinical trials to longitudinal studies, our researchers utilize cutting-edge tools and technologies, ensuring that our investigations contribute valuable insights to the evolving landscape of mental health understanding.

Holistic Approaches: Recognizing the multifaceted nature of mental health, our research embraces holistic approaches. We investigate the interplay between biological, psychological, social, and environmental factors to develop a comprehensive understanding that informs evidence-based interventions and support systems.

Community-Centric Research: Our commitment extends beyond the laboratory. We actively involve communities, valuing diverse perspectives and championing inclusivity. Through collaborative partnerships and participatory research methods, we seek to amplify the voices of those directly affected by mental health challenges, promoting a collective journey towards well-being.

Translational Impact: We aspire not only to advance knowledge but to translate our findings into tangible improvements in mental health care. By bridging the gap between research and practice, we aim to contribute to the development of effective interventions, destigmatize mental health issues, and foster a culture of understanding and support.

Interdisciplinary Collaboration: In our pursuit of excellence, we foster interdisciplinary collaboration. Our centre serves as a nexus where researchers, clinicians, community advocates, and policymakers converge to share insights, ideas, and expertise. By breaking down silos, we accelerate progress in mental health research and bring about transformative change.

Ethics and Integrity: Guided by ethical principles, our research prioritizes the well-being and privacy of participants. We uphold the highest standards of integrity, ensuring that our studies adhere to ethical guidelines and contribute responsibly to the global discourse on mental health.

Join the Movement: We invite you to join us on this transformative journey. Whether you are a researcher, advocate, or someone passionate about mental health, your support propels our mission forward. Together, we can unravel the mysteries of the mind, empower individuals, and create a world where mental well-being is a shared priority

Our counselling services includes:
Counselling to all kind of psychological problems
Geriatric care
Career Guidance
Relationship counselling
Mobile addiction
Personality development and any of critical behavioural issues

Introducing Dr. Abinayaa Balaji, our esteemed psychologist with a Ph.D. in Psychology and a decade of invaluable experience. Dr. Abinayaa is not just a practitioner but a visionary, incorporating a positive psychology approach to empower individuals and contribute to the creation of a flourishing society.

With a commitment to fostering well-being and resilience, She believes in harnessing the strengths and virtues within each individual to pave the way for a better generation. Dr. Abinayaa brings a rich tapestry of knowledge and having successfully navigated and addressed a myriad of psychological issues throughout their career. With a commitment to excellence, She has honed their skills through extensive internships and collaborative work with specialists in the field. Grounded in a holistic approach, their aim is to guide individuals towards a better, problem-free life. She understands the complexities of the human mind and is dedicated to fostering positive transformations, ensuring that each client receives the personalized care and support needed to embark on a journey towards lasting well-being. Having undergone various internships and collaborated with specialists, Dr. Abinayaa is dedicated to guiding clients toward a life that goes beyond the absence of problems, focusing on cultivating positivity, meaning, and personal growth. Join Dr. Abinayaa on a transformative journey, where the goal is not just to alleviate issues but to empower individuals, creating a ripple effect towards a more flourishing and harmonious society.

Counselling Sessions

The Centre was inaugurated on 24th January 2024, and counselling sessions commenced from 25th January an auspicious Full Moon day.

Initially there are 4 sessions on Sunday and other national holidays, one evening session on all weekdays

a. Normally those who live close proximity of our Sai Mandir, the session will be on One to one – Face to Face session at Sai Guru Trust premises

b. Those residing away from Mandir and difficulty in bringing patient to the centre, there will be Virtual Media Sessions with Google Meet application

Prospective clients are requested to register their name, address and contact number (with requisite Registration fee and subsidized concessional counselling fee which will be utilized for temple operation and maintenance expenses) and get prior appointment of Date and time of their session

சாயிகுரு மனநோய் மருத்துவ  ஆராய்ச்சி & சிகிச்சை மையம்

 

மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக இந்திய மக்களிடையே மனநலம் குறித்த அக்கறை இன்னும் அதிகரிக்க வேண்டும் 

உலக அளவில் 18 வயதுக்கு மெற்பட்டவர்களில் 5% பேர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுவதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல், 8 பேரில் ஒருவர் மனநல பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகிறது.

ஒருவர் தனக்குள்ள உளவியல் பிரச்னைகள் பற்றி பொதுவெளியில் பேசத் தயங்கும் போக்கே இருந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது. மக்கள் தங்கள் மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், மனநலம் என்றால் என்ன, என்ன மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மனநல மருத்துவரை நாடவேண்டும் என்பன போன்ற அம்சங்களில் பலருக்கும் கேள்விகள் உள்ளன.

மனநலம் என்பது நம் உடல் நலத்தின் பிரிக்க முடியாத பகுதி. மனநலம்தான் தனிநபர் நல்வாழ்வு, பயனுள்ள, திறன்மிக்க தனிநபர் செயல்பாட்டிற்கான அடித்தளம். மன நலக் கோளாறுகளைத் தடுப்பது, சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு ஆகிய அனைத்தும் மன நலத்தில் அடங்கும்.

மனச்சோர்வு, பதற்றம், பசியின்மை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற மிகவும் பொதுவான மனநலக் கோளாறுகளே கூட, உதவி நாடாமல் தவிர்க்கப்படுவதால் புறக்கணிக்கப்படுகின்றன. மனநலத்தைப் பொறுத்தவரை அதை கவனிக்காமல் விட்டால், பின்னாளில் பாதிக்கப்பட்ட தனிநபருக்கும் சரி, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சரி சிக்கல்களைக் கொண்டு வரலாம்.

அத்தகைய சில அடிப்படையான, ஆனால் மருத்துவ கவனம் தேவைப்படக்கூடிய சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளை இங்கு பார்ப்போம்.

வேலையின் மீது ஆர்வமின்மை

வேலையில் நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென வேலையின் மீது ஆர்வமின்றி இருப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்புடையதாக இருக்காது. அப்படியிருக்கும்போது, அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் அபிநயா பாலாஜி.

அதேபோல், “ஓர் ஆணாக இருந்தால், தனிபட்ட வாழ்விலும் மிக ஆர்வமாகச் செய்துகொண்டிருந்த விஷயங்களை எல்லாம் கைவிடுவது மற்றும் ஒரு பெண்ணாக இருந்தால், அன்றாடப் பணிகள் எதன் மீதும் கவனமில்லாமல் இருப்பது என்று இருந்தால் கவனிக்க வேண்டும்,” என்றவர் சுய சுகாதாரத்தில் அக்கறையின்றி இருந்தால், அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உதவியை நாட வேண்டும்.

பேச்சில் மாற்றங்கள்

மனச்சிதைவு நோய் இருந்தால் பேச்சு வித்தியாசமாக இருக்கலாம், எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாது. பணியை விடுவதற்கு, உடன் பணியாற்றுபவர்கள் எல்லாம் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதைப் போன்ற வித்தியாசமான காரணங்களைக் கூறுவார்கள்.

“தங்களுடைய பொருட்களை தங்களுக்குப் பிறகு யாருக்குக் கொடுப்பது, தனக்குப் பிறகு யார் என்பதைப் போன்ற விஷயங்களைப் பேசுவது, தற்கொலை எண்ணங்கள் இருப்பதற்கான அறிகுறி. இவையெல்லாம் எச்சரிக்கை அறிகுறிகள். அப்படியான பேச்சுகள் இருக்கும் சூழலில் கட்டாயம் கவனிக்க வேண்டும், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்,” என்று கூறுகிறார் டாக்டர் அபிநயா பாலாஜி.

கவனமின்மை, நாட்டமின்மை, தூக்கமின்மை

வயதானவர்களுக்கு கவனமின்மை, ஞாபக மறதி போன்றவை இருந்தால் அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரை, பிரசவத்திற்குப் பிறகான மனச் சோர்வு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இத்தகைய மனச்சோர்வு இயல்பாகவே பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்டு சில வாரங்களில் குணமடைந்து விடும்.

ஆனால், இன்றைய சூழலில் சிலருக்கு அதுவே நீண்டகாலம் நீடிக்கும்போது குழந்தைக்கே அபாயமாகக்கூட அது மாறலாம் என்கிறார் டாக்டர் அபிநயா பாலாஜி. “குழந்தையையே கொன்றுவிட்ட நோயாளிகளைக் கூட நான் பார்த்துள்ளேன். தான் இல்லையென்றால் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது, தன்னையே கவனித்துக்கொள்ள முடியவில்லையே எப்படி குழந்தையைக் கவனிப்பது என்பன போன்ற அதீத சிந்தனைகளால் ஏற்படும் மனச்சோர்வு காரணமாக குழந்தையையே கொல்வதும் கூட நடக்கிறது.

எதிலுமே நாட்டமின்றி இருப்பது, உடல் எடை அபரிமிதமாகக் குறைவது, தூக்கமின்மை, கவலை போன்றவற்றோடு இந்த மாதிரியான சிந்தனைகளும் வரும். இத்தகைய அறிகுறிகள் தெரியும்போதே மனநல சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் அபிநயா.

உடல் எடை குறைதல்

உடல் பருமன் அதிகரிப்பது என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. அது நம்முடைய வாழ்வுமுறை மாறியதால் நிகழ்கிறது. ஆனால், உடல் எடை மிகவும் குறைவது மனநல ரீதியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை என்கிறார் டாக்டர் அபிநயா.

“உடல் எடை அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருப்பதால் இரண்டு வகையான மனநல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று, அதிகமான உணவை நன்கு சாப்பிட்டுவிட்டு பிறகு அவையனைத்தையும் வாந்தி எடுத்துவிடுவது, அல்லது உடனேயே மிகக் கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றால் கரைத்துவிட முயல்வது. மற்றொன்று, எடை கூடிவிடக் கூடாது என்பதற்காக சாப்பிடாமலேயே இருப்பது.

இவர்கள் உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனத்தோடு இருப்பார்கள். முதல் பிரச்னையால் அவதிப்படுவோர் நிறைய சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு, எடை கூடிவிடக் கூடாது என்பதற்காக சாப்பிட்டதை அப்படியே வாந்தியெடுத்து விடுவார்கள்.

இது புலிமியா, பிஞ்ச் ஈட்டிங் குறைபாடு என்றழைக்கப்படுகிறது. அதேபோல், சாப்பிடாமலேயே இருக்கும் பிரச்னையால் அவதிப்படுவோர், எப்போதும் மிகவும் ஒல்லியாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகத் தீவிரமாகச் சாப்பிடாமலேயே இருப்பார்கள். இது அனொரெக்சியா நெர்வோசா என்றழைக்கப்படுகிறது.

இப்படி மிகத் தீவிரமாகச் சாப்பிடாமல் இருப்பதும் அதீதமாகச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு அதனால் எடை கூடாமல் இருக்க மோசமான வகையில் முயலும் பழக்கமும் யாருக்கேனும் இருந்தால், அவர்கள் மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டியது அவசியம்,” என்று கூறுகிறார் டாக்டர் அபிநயா.

எப்போதும் பதற்றம், பயம்

தெனாலியை போல் சின்ன விஷயமாகவே இருந்தாலும் பதற்றத்தோடும் பயத்தோடுமே அணுகினால் நிச்சயம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எந்த வேலையையும் படபடப்புடனேயே செய்வது, செய்ய வேண்டிய வேலையை நினைத்து, நடக்க வேண்டியதை நினைத்து அதற்கும் வெகுகாலத்திற்கும் முன்பிருந்தே மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாவது, சிறு விஷயமாகவே இருந்தாலும் அதிர்ந்துவிடுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட விஷயங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும். சான்றாக, சிலர் சாவு மேளத்தைக் கேட்டால் பயந்து அலறிவிடுவார்கள், பல்லியைப் பார்த்தாலே ஊரையே கூப்பிடுமளவுக்கு அலறுவார்கள். அவர்களுக்கு அந்த பயத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்கிறார் டாக்டர் அபிநயா.

இத்தகைய அச்சங்கள் இருக்கும்போது அதனால் பேனிக் அட்டாக் ஏற்படலாம். அது ஏற்படும்போது, மூச்சுவிட முடியாது, இறந்துவிடுவோமோ என்ற அளவுக்கு அச்சம் அதிகமாக இருக்கும், தொண்டை வறண்டுவிடும். கூட்டத்தில் இருப்பது பிடிக்காது, இருட்டு அறையில் இருந்தால் பிடிக்காது.

“இத்தகைய பிரச்னைகளுக்கு மருந்தியல் சிகிச்சை, உளவியல் சிகிச்சை இரண்டுமே வழங்கப்படும். இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடனும் சிகிச்சையளிக்கப்படுகிது. அதுபோக, அச்சத்தைப் போக்குவதற்கு மருந்தியல் சிகிச்சையளிப்பதோடு சேர்த்து, அச்சத்தின் அடிப்படைக்கான உளவியல் சிகிச்சையும் வழங்கப்படும்.

சான்றாக, ஒருவர் சிலந்தியைப் பார்த்தால் பயந்து நடுங்குகிறார் என்றால் அவருக்கு தொடக்கத்தில் சிலந்தி குறித்த விவரங்களை சிறிது சிறிதாகக் கற்றுத் தந்து, அதன் படத்தைக் காட்டி, பிறகு படத்தைத் தொட்டுப் பார்க்கச் சொல்லி, இப்படியாக மெல்ல மெல்ல பயத்தைப் போக்குவதற்கான சிகிச்சை வழங்கப்படும்.

அதோடு, ஒரு சின்ன விஷயத்திற்கு ஏன் இவ்வளவு அச்சம் ஏற்படுகிறது? அந்த அச்சத்தின் அடிப்படை எங்கிருந்து தொடங்கியது? ஆகியவற்றை ஆராய்ந்தும் சிகிச்சை அளிக்கப்படும்,”

பிரமை ஏற்படுதல்

இருவர் பார்க்கும் ஒரே செயலில், ஒருவர் மட்டும் அது தன்னைக் குறி வைத்து செய்வதைப் போல நினைத்துக் கொள்வதைத்தான் பிரமை என்கிறார் டாக்டர் அபிநயா பாலாஜி.

“சான்றாக, இருவர் இருக்கிறார்கள். எதேச்சையாக அதில் ஒருவர் தனது எச்சிலைத் துப்புகிறார். அப்போது மற்றொருவர், ‘அவன் என்னைப் பார்த்து, என்னைக் கேவலப்படுத்தவே துப்புகிறான்’ என்று தனக்குத் தானே ஓர் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் இது.

எதேச்சையாக நடக்கும் விஷயம் கூட, தன்னைக் குறி வைத்தே நடப்பதைப் போல் நினைத்துக் கொள்வது. உறவுகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் அதீத சந்தேகம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்தால் இது அதிகமாகிறது,” என்று கூறினார்.

உணர்ச்சிக் கொந்தளிப்பு

சிலர் திடீரென கோபப்பட்டு கத்துவார்கள், கண்ணீர் விட்டு அழுவார்கள். தீவிர மன உளைச்சல், கோபம் போன்ற இயல்புக்கு மாறான மனநிலைக்கு ஆளாவார்கள். இப்படி இயல்பான மனநிலையில் இருந்து திடீரென வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவது மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

“தன்னையோ மற்றவர்களையோ பாதிக்கக்கூடிய எந்த மாற்றத்தையும் நிச்சயம் கவனிக்க வேண்டும். குடும்பத்தில், உறவுகளில் எல்லாவற்றுக்கும் கத்துவது, நான் செத்துப் போய்விடுவேன் என்று மிரட்டுவது, தன்னையே காயப்படுத்திக் கொள்வது போன்றவற்றைச் செய்தால் நிச்சயமாக அதுவொரு பிரச்னைதான். மேலும், ஒரு சின்ன விஷயத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மனதளவில் பலவீனமாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் மனநல மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்,”

“மனநலமும் உடல்நலத்தைப் போலவே முக்கியமானதுதான். மனநல மருத்துவரை பார்க்கப் போவது என்றால் அதை வெளியில் சொல்லவே கூச்சப்பட்ட காலகட்டமும் இருந்தது. ஆனால், முன்பு அளவுக்கு இப்போது இல்லை. மனநலமும் முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

மனநலத்திற்காக உதவி கேட்பது கோழைத்தனமான முடிவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வதைப் போலவே, மனநல பிரச்னைகள் ஏற்படும்போதும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் அபிநயா பாலாஜி.

எங்களிடம் உள்ள மருத்துவ குழுவினர் அனைத்து விதமான மனநோய்களையும் கண்டறிந்து சரியான அனுகுமுறையுடன் சரியான சிகிச்சை கொடுப்பதில் அனுபவம் மிக்கவர்கள். உங்களுக்கு தெரிந்த நண்பர்களோ உறவினர்களோ கீழ்கண்ட மனவியல் சிகிச்சைக்காக எங்களை தொடர்பு கொள்ளலாம்.

அனைத்து விதமான உளவியல் பிரச்சனைகள், தற்கொலை முயற்சி, முதியோர் மனப்பிரழ்வு, மறதி, ஒத்துழையாமை, செய்யும் தொழிலில் வேலை செய்யும் இடத்திலுள்ள பிரச்சனைகளால் மன அழுத்தம்,  குடும்ப உறவுகளில் சிக்கல், குடி நோயால் குடும்பம் சீரழிதல், பிள்ளைகள் கூடாநட்பால் சீரழிதல், அலைபேசிக்கு அடிமையாகி வாழ்க்கை சீரழிதல், விரும்பியது கிடைக்காத விரக்தி, தகுதிக்கு மீறிய ஆசையால் எதார்த்தம் புரியாது நம்பிக்கை சிதைவு என ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் மனம் திறந்து பேசுங்கள், ஒரு மாற்றம் வரும் பாருங்கள்.

மனநல சிகிச்சைகள் மனிதகுல சேவை மனப்பான்மையில் செய்யப்படுவதால், ஆலோசனைக் கட்டணங்கள் மிக மிக குறைந்த அளவில் வாங்கப்பட்டு அந்த தொகை முழுவதும் அறக்கட்டளையில் சேர்ப்பிக்கப்பட்டு திருக்கோயில் பணிகள், சமூக சேவைகள் சிறப்பாக செய்ய பயன்படுத்தப்படும், மனநல சிகிச்சை  மையம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி வளர்பிறை சுபமுகூர்த்த நாளில்  திறப்புவிழா செய்யப்பட்டு ஆலோசனை அமர்வுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

தினசரி மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஒரு அமர்வும், மற்றும் ஒவ்வொரு ஞாயிறு, மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலையில் இரண்டு, மாலையில் இரண்டு அமர்வுகளும் நடைபெறும்.

பொதுவாக அமர்வுகள் நேருக்கு நேர் அறக்கட்டளை வளாகத்திலும், வெளியூரிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்கள் கூகுல் மீட் மூலமாகவும் (virtual meeting with Google Meet or similar Apps) சிகிச்சை அளிக்கப்படும்.

எங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி & Whatsapp 8300186618, மின் அஞ்சல் saigurutrust@gmail.com