PRAYER REQUESTS

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து;

சர்வே ஜனா சுகினோ பவந்து

கூட்டுப் பிரார்த்தனை

ஓம் சாய் ராம்,

  1. தேர்வுக்கு செல்லும் குழந்தைகள் தேர்வில் கவனமுடன் தேர்வெழுதவும்,
  2. பிறந்த நாள், திருமண நாள் மற்ற முக்கிய நாட்களை பாபாவிடம் கூறி அவருடைய ஆசிகளைப் பெறவும்,
  3. நெருங்கிய சொந்தங்களோ, குடும்பத்திலுள்ளவர்களோ உடல்நலம் பெறுவதற்கும்.
  4. பணப்பிரச்சனைகளோ, உறவில் விரிசலோ, குழந்தைகள் நமக்கு கட்டுப்படாமை,
  5. நாம் அறியாதபடி நம் மகனோ, மகளோ தீயவர்களுடன் சேர்க்கை,
  6. பல்வேறு காரணங்களால் குடும்ப-அமைதி-குறைந்து, விரகத்தியுடன் வாழ்தல்,
  7. வெளியே சொல்ல மூடியாத காரணங்களால் மன அமைதி இழப்பு, பொருள் இழப்பு

இப்படி ஒவ்வொருவருக்கும் பல்லாயிரக்கணக்கான- காரணங்களில் ஒன்றோ இரண்டோ இருக்கலாம்.

அதை பாபாவிடம் கூறி நிவாரணம் பெற பாபாவிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்து
பாபாவிடம் தீர்வு கேட்டு கூட்டு பிரர்த்தணை செய்யும் நிகழ்ச்சி ஒவ்வொரு வியாழன் மாலை ஆரத்திக்கு பிறகு நடைபெறும்.

உங்கள் பிரார்த்தனைகளை பாபாவின் பாதங்களில் வைத்து பூஜை செய்த பிறகு கோயிலில் உள்ள பக்தர்கள் எல்லோலும் கூட்டு பிரார்த்தனை செய்யப்படும்.

நமது ஸ்ரீ சீரடி சாயி குருவருள் திருக்கோயிலில் பாபாவின் முன்னிலையில் கூட்டுப் பிரார்த்தனை ஒவ்வொரு வியாழன் மாலையிலும் மாலை ஆரத்திக்கு பிறகு செய்யப்படுகிறது. இந்த கூட்டுப் பிரார்த்தனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், வாழ்வில் பல காரணங்களுக்காக அடிபட்டு அமைதியை இழந்து தவித்து வருபவர்களுக்காகவும், பாபாவின் பக்தர்கள் அனைவரும் நலமான வாழ்வும் வளமான செல்வமும் நிலையான நிம்மதியும் அமைதியான நாட்களையும் பெற்று பெருவாழ்வு வாழ சாயிபாபாவின் அமைதி பெற்று அவர் அருளைப்பெற நடை பெற்று வருகிறது. நீங்கள் அனைவரும் இந்த முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு இதன் பலன்களை பெற அன்புடன் அழைக்கிறோம்.

  1. தனியாக செய்யும் பிரார்த்தனைகளை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்தான சக்தி உள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
  2. பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது உங்கள் பிரார்த்தனையின் சக்தி கூடுகிறது.
  3. உங்களுக்கு தெரியாதவர்களுக்கு அவர்கள் நலம் பெறும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனை அவர்களுக்கு குணமளிப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கும் அதன் பயன் கிடைக்கும் என்பது நடைமுறை உண்மை.
  4. நமது கோயிலில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்யும்போது நாம் பாபாவின் குடும்பப் பிள்ளைகளாக இருக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது.
  5. லோகாஸ் ஸமஸ்தாசுகினோ பவந்து; சர்வே ஜனாசுகினோ பவந்து என்பதற்கு ஏற்ப உலகம் சுபிட்சமாக இருந்தால் நாமும் சுபிட்சமாக இருப்போம். உலக சுபிட்சத்திற்காகவும், உலக மக்கள் சுபிட்சத்திற்காகவும் நாம் கூட்டு பிரார்த்தனை செய்வோம். பாபாவின் அருள்பெறுவோம். ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்.

உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். வியாழன் அன்று மதியம் 12.00 மணி வரை கோயிலை வந்தடையும் பிரார்த்தனைகளை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்து, மாலை 6.30 மணிக்கு மாலை ஆரத்திக்கு பின்பு கூட்டு பிரார்த்தனை செய்யப்படும்.

“Every problem can be solved and solved right if you pray.”
“If ye have faith…nothing shall be impossible unto you.”
“If God be for us, who can be against us?”
“God is with me; God is helping me; God is guiding me.”
I can do all things through God which strengtheneth me.”
“The kingdom of God is within me”

Knowing the enormous healing power on Group prayer in presence of our Sadguru Shirdi Sai Baba, our temple conducts Group Prayers on All Thursday Evenings after Evening Aarati. With overwhelming response on the quick healing effect on sick and troubles devotees, we welcome you to join with our team and reap benefits of group prayers:

  • Praying Together amplifies the power in our prayers.
  • Praying Together provides comfort for our pain.
  • Praying Together reminds us we are part of the Shirdi Sai Baba Mandir.
  • Praying Together puts us all on the same needy level.
  • Praying Together makes God’s presence known.

Please click the picture below to submit your prayers: Prayers reaching us up to 12.00 noon on Thursday will be taken up for submitting to the Lotus Feet of Sai Baba and Praying after Evening Aarati at 6.30 pm.

To Submit your prayers