மஹா சக்தி ரூபம், மக்களின் கஷ்டங்க்களை தீர்க்கும் கலியுக தெய்வம், நமது வாராஹி தேவி.
வாராஹியை உரிய மந்திரங்களைச் சொல்லி தேவியைத் தொழுவோம். வாழ்வில் நல்ல திருப்பங்களைத் தந்தருளுவாள் வாராஹி. மங்காத செல்வம் தந்து காத்தருளுவாள் தேவி.
சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம். வலிமை மிக்கவள், நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.
கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
வாராஹி அம்மனுக்கு கோயில் அமைத்து முறைப்படி பூஜைகள் செய்து பக்தர்கள் அனைவரும் நலமும் வளமும், சகல செல்வங்களும் பெற குருவருள் சாயிபாபா கோயில் வளாகத்தில் கோயில் ஜனவரி மாதம் 30ம் தேதி தேய்பிறைபஞ்சமி நாளில் வாராஹி தேவி எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை/பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினத்தில் வளர் பிறை/தேய்பிறை பஞ்சமி திதி அனுஷ்டிக்கபடுகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து நம் தொல்லைகளில் இருந்து மீட்டு அருள்வாள் பால வாராஹி.
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு. நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.
பஞ்சமி திதி நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறை யில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம். வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து, எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம்.
பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை, வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்திய மாக வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம். இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி. மேலும் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது, பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.
வாராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
பால வாராஹியின் மகிமைகள் – வாராகியை வணங்கிய பக்தர்கள் அனுபவங்கள்